Monday, 5 June 2017

சிறகடித்து பறக்கிறேன்
எல்லை பற்றிய எண்ணமின்றி!
கடலில் களிக்கிறேன்
கரை காணும் கவலையின்றி!
புத்தகங்களில் அமிழ்கிறேன்
கற்று முடிக்கும் ஆவலின்றி!
அன்புகளில் திளைக்கிறேன்
பிரிவுகள் பற்றிய சிந்திப்பின்றி!
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறேன்
கண்ணீர்களின் நினைவின்றி!
சுயமாக சிந்திக்கிறேன்
கோட்பாடுகளில் நம்பிக்கையின்றி!
என் பயணம் முடிவை நோக்கி அல்ல
எனைக்காணாது மரணம் தவிக்கும் வரை!

No comments:

Post a Comment